பூ வாசம் உன் வாசம்..!!
மணக்கும் மல்லிகை பூ
உந்தன் குணம்
சுகமான முல்லை பூ
உந்தன் மனம்
அழகான ரோஜா பூ
உந்தன் செயல்கள்
சிறப்பான குறிஞ்சிப் பூ
உந்தன் கோபம்
சிவந்த செம்பருத்திப் பூ
உந்தன் கனிவு
அற்புத வெண்தாமரைப் பூ
உந்தன் மனம்
பூவே பூவே பெண்பூவே
அழகே அழகே என் அற்புதமே..!!

