மனிதத்தை திண்ணும் மதங்கள்
பரதேசி கையில்
பாத்திரம் போல
கோயில்களில்
உள்ளேயும் வெளியேயும்
உண்டியல் எதற்கு?
யார் உண்டியை
நிறைப்பதற்க்கு?
ஆண்டவனின் சன்னதியில்
அனைவரும் சமமென்றால்
அங்கே அனுமதி கட்டணம்
அந்த வெகுமதி எதற்கு?
பூஜைக்கும் தோசைக்கும்தான்
போகுது உண்டியல் என்றால்
தரிசனம் பன்னுவோரிடம்
தட்ச்சனை கேட்டு தட்டேந்தும்
தரித்திரம் அங்கே எதற்கு?
அன்று ஆண்ட மன்னர்கள்
மக்கள் தம்மை மதிக்காமல்
எழுச்சிகொண்டு புரட்சி செய்தால்
போய்விடுமே அந்தோ!
அவர்தம் ஆட்சியென்று.....
அடங்கி கிடக்கட்டும் மக்களென்று
ஆலயங்கள் கட்டிவைத்து
ஆண்டவன் என்று சொல்லிவைத்து
அதற்க்கு ஆயிரம் கதைகள் கட்டி
உயர்வு தாழ்வு உள்ளே புகுத்தி
மடங்கள் பல அதனுள் கட்டி
மக்களை மடையர்களாக்கி
சமுகக்கலவரதீ எரியவிட்டு
குளிர்காய்ந்தார்கள் கோமான்கள்
இது இங்கு மட்டுமல்ல
உலகம் தழுவிய உண்மை
அகிலமெங்கும் நிறைந்துள்ள
அவநம்பிக்கையின் அடையாளங்கள்
சுயநலவாதிகளின் சுயரூபங்கள்
மனிதன் உண்டாக்கிய மதங்கள்
மனிதர்களையே திண்ணுகிறது
மனிதத்தை தின்றுக்கொண்டு
மமதையுடன் அலைகிறது
அவநம்பிக்கை உடையவருக்கே
அடுத்தவர் உதவி தேவை
ஆண்டவர்களின் உதவியும்
அவர்தம் தூதுவர்களின் சேவையும்.
தன்னம்பிக்கை உடையவரோ என்றும்
தரணியில் வாழலாம் தலைநிமிர்ந்தே!