தாய்மையின் வாசனை.....

மணமாய் இருக்க வேண்டும்
அதற்காய் கூடுதலாய்
முகத்திற்கும், உடம்பிற்கும்
அத்தோடு ஆடைகளுக்கும்
சேர்த்து கலந்து
வாசனைத் திரவியங்களை
அள்ளி அப்பிக் கொள்கின்றாள்...

வியர்வையின் வேகம்
வெள்ளமாய் வெளியேறினாலும்
அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
சொட்டு சொட்டாய் அலுவலக
கோப்புகளில் இறங்குகிறது
அவளின் தாய்மையின் வாசனை....

அவசர அவசரமாய் அலுவலக
கழிப்பறையில் நுழைந்து
கண்ணீரோடு பீச்சிவிடுகிறாள்...
பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்றலறும்
பச்சிழங்குழந்தையின் அழுகுரல்.....

எழுதியவர் : Premi (16-Jul-12, 2:16 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 148

மேலே