ஒரு செல்போனின் காதல்.
அதிக அன்புற்று.....
ஆர்வமுற்ற காதலன்,
உள்ளகிழத்தியுடன்
உடனே பேச அவாவுற்றான்.
ஆசை அம்மணியின்
தொடர்பு எண்ணை
விரலால் அழுத்தி
குரலால் குழைந்தான்.
அவளோ,
"என்ன விஷயம்? ஏன் கூப்பிட்டீர் ?" எனறாள்.
ஒரு நிமிடம் தடுமாறிப்போன தலைவன்,
"எனது சொல்பெசிக்கு (cell phone தான்)
உனது சொல்பேசிமீது
அளவு கடந்த காதலாம்!!!!
அதைச் சொல்லவே
இவ்வளவு அவசரமாய்க் கூப்பிட்டேன்" என்றான்.
அன்னவளும் சுதாரித்து
"என் சொல்பேசி மிகவும் வெட்கப்படுவதாகச் சொல்லுங்கள்" எனறாள்.
பாலு குருசுவாமி.