மனிதப் பிறவி

பாதச் சுவடுகளில்
பாவக்கரை படியாத
மனிதர் யாருமிலர்


பாவங்கள் புரியவும்
மனிதன் படைக்கப் பட்டவன்
பாவங்கள் மட்டுமேயென்றி


பச்சையான மனிதன்
மன இச்சைக்கு அடிமையானவன்
மீள முடியா விதி இது


இச்சையினின்றும்
மீண்டு வருவானேயாயின்
சத்தியமாய் அவன் புனிதன்


படைப்புக்களை
அறிந்தவன்
அறிஞன்


படைத்தவனையே
அறிந்தவன்
ஞாநீ


மனிதனோ...
புனிதனோ...
அறிஞனோ...
ஞாநீயோ...


மனிதப் பிறவியே
மகத்தான பெரும் கொடை தான்.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (17-Jul-12, 8:30 am)
பார்வை : 230

மேலே