படித்ததில் பிடித்தது

(கவிஞர் அஸ்மின் கவிதை உங்கள் பார்வைக்கு....)


நான் ஒனக்கு சொறிகின்றேன்
நீ எனக்கு சொறிஞ்சிவிடு
நீ எனக்கு சொறிஞ்சாத்தான்
நான் ஒனக்கு சொறிவேன்டா..

... நான் ஒனக்கு சொறிஞ்சேனே
நீ எனக்கு சொறிஞ்சாயா....?
நீ எனக்கு சொறியாட்டி
நான் ஒனக்கு சொறியேன் போ...!

''வெரிகுட்டு'' நீபோட்டா
''வெரிநைஸி'' நாந்தருவேன்
''சூப்பர்''ன்னு நீ போட்டா
''எவேசம்''னு நாந் தருவேன்

''லைக்'' எனக்கு நீபோட்டா
லைப்லையும் மறக்கமாட்டேன்
கண்டுக்காது விட்டீன்னா
கல்லெடுத்து எறிஞ்சிடுவேன்....

நான் ஒனக்கு சொறிகின்றேன்
நீ எனக்கு சொறிஞ்சிவிடு
நீ எனக்கு சொறிஞ்சாத்தான்
நான் ஒனக்கு சொறிவேன்டா..

எழுதியவர் : (17-Jul-12, 7:40 am)
பார்வை : 190

மேலே