நிழலிக்கிறது மனசு....

என்.........என்.......
மனம் துடி துடிக்கும்

சில வேளைகளில்
உன் வருகை கேட்டு
தானாகவே அது படபடக்கும்

உன் நினைவின் அகோரம்
கர்ப்பம் களைந்தால் கூட
என் தேகம் உணராது

கருகும் மனதில்
ஓர் உருகல் நிலை

காதலை வேவு பார்க்கும்
ஓர் அந்தரங்கம்

எல்லாமே என்
மனதை உதைக்கிறது..
உன் ஞாபகம் தான்
என்னையே சிதைக்கிறது

என் தாய்க்கும் புரியவில்லை
என் கர்ப்பத்தின் சந்தர்ப்ப வாதம்

என் பிறப்பில்
எனக்குக் கொஞ்சம் சங்கற்பம்
உன்னை நினைத்து

என் வேதனை உனக்குப் புரியாது
அதை என் தாயே அறிவாள்
நீ எதைத்தான் புரிந்தாய்

காதல் எனும் கடலுக்கும்
காதல் எனும் கடுகுக்கும்
வித்தியாசம் உனக்குப் புதிர்
ஆனால் நான் தான் விடை

என்னை அழவைத்துப் பார்க்கிறாய் - அதில்
உனக்கு என்ன ஆறுதல் உண்டு

என்னை அடைய நினைத்துப் பார்
என் மின்சார உடலின் தாக்குதலில்
உன் ஊனமுற்ற உறுப்புகள் கூட
உண்மை நிலை பெறும்.

எழுதியவர் : fairoosa (17-Jul-12, 6:01 pm)
பார்வை : 253

மேலே