என் நட்ப்புக்காக..........
பத்தாண்டு கடந்துவிட்டேன்
உன்னை பார்க்காமலே வாழ்ந்துவிட்டேன்
எப்படித்தான் வாழ்ந்தேனோ
எனக்கே புரியவில்லை.
என்னதான் சொன்னாலும் இதுவரை
என்னால் உன்னைமறக்க முடியவில்லை
காலந்தான் கடந்தாலும்
ஞாலந்தான் அழிந்தாலும்
கடந்த நாட்களில் கரைந்தோம் நட்பில்
நடக்கும் நாட்களிலும்
நான் நடக்கிறேன் உன்னோடு
நீ மட்டும் சென்றுவிட்டாய்
என்னைவிட்டு வின்னோடு