எது நிஜங்கள்
தாய்
நட்பு
மண்
இயற்கை
சுற்றம்
எல்லாமே பொய்மை முகங்கள்
பொய்மையின் நிஜங்கள்
சிரிப்பதற்கும்
அழுவதற்கும்!
சொந்தங்கள்
மனிதக் காடுகள்
முட்களுமான உறவுகள்
பொய் முகங்கள்!
தனிமையில் நான்
துணையின்றி
பொறுமையாக
என்னைத் தொலைத்து விட்டு
தேடுகிறேன் அன்பை மட்டும்!
அன்பே நஞ்சை முறிக்கும்
ஆயுதம்!
அன்பே துளிர்க்க வைக்கும்
உயிர்!
பொய் முகங்களில்
நிஜம் எதுவோ!
ஓட்டை இல்லாத
வானத்தில்
ஒழுகுகிறதே
மழையாக
இது நிஜமோ!