கடவுள்

உருவங்கள் மாறினாலும
வழிபடும்
முறைகள் மாறினாலும்

"இறைவன்"
என்பவன் "ஒருவனே"
இதை உணர்ந்தவன்
"மனிதனே "

மனிதா
நீ
நல்ல
"மணதை"
கொண்டவனாய் இரு

மதங்களை
கொண்டவனாய்
இருக்காதே!

கடவுளை
நேசிப்பவனாய் இரு
கடவுளை!
கட்டிபோடும்
காவலனாய் இருக்காதே!

மனிதா!
நீ
முதலில் உன்னை நேசி!
இவ்வுலகம் உன்னை
சுவாசிக்கும்!

கடவுளை!
உள்ளத்தால் நேசி
மக்களை!
உணர்வால் சுவாசி........

எழுதியவர் : கவி பாலா (19-Jul-12, 1:46 pm)
சேர்த்தது : kavi bala
பார்வை : 199

மேலே