வேணாம் மச்சான் வேணாம்.....

வேணாம் மச்சான் வேணாம் என்ற பாடலுக்கு எனது மாற்று வரிகள் ஒரு சிறிய முயற்சியில்!!!

கடவுள் படைத்த இழிவில்
இந்த காதல் ஒன்று தான்!
அதில் மாட்டிக்கிட்ட பலரில்
இப்ப நானும் ஒன்று தான்!

காதல் செய்யும் போது
கையில் காசு வேணும்டா!
காசு கொஞ்சம் கரையும்
அது மறைஞ்சி போகும்டா!

ஜீன்ஸ் போட்ட பொண்ண
நீயும் காதலிக்காதே!
வாழ்க்கை ஆறிப்போன
வடைய போல டேஸ்ட் இருக்காதே!

காதலிச்ச பொண்னுக்கூட
வெட்டிங் வேணாம்டா!
எனக்கு கஷ்டத்துல கட்டிங்
தரும் நண்பன் போதும்டா!

வீட்டுக்கு தெரிஞ்சா காதல் செஞ்ச
ஏன்டி ஒடச்ச என்தன் நெஞ்ச

வாழ்க்கையை உன்கிட்ட தொலச்சிபுட்டேன்
அத தேடின போது நீ மறச்சிக்கிட்ட

நீ தோளில் சாய்ந்த நேரம்
என் தோழனயே மறந்தேன்
நீ என்ன பிரிஞ்ச நேரம்
என் தோழன் தோளில் சாய்ந்தேன்

என் நண்பன் காட்டும் பாசம்
என் கல்லறையிலும் வீசும்
நீ எனக்கு செஞ்ச மோசம்
உன் நெஞ்சுக்குள்ள கூசும்

நீயும் கல்லறை போக காதலும்
ஒரு வழி தான்டா
காதலி சிரிச்சி பேசிட்ட
கல்லறை கட்டாயம் தான்டா

லப்பு டப்புனு துடிச்ச நெஞ்சு
லவ்வு தப்புனு துடிக்குதடி

காதலில் நானும் மூழ்கி விட்டேன்
என் கால்களை ஏன்டி கட்டிவிட்டே

நீ சொல்லும் ஒரு சொல்லில்
என் நெஞ்சுக்குழி துடிக்கும்
உன் வார்த்தை மாறிப்போனால்
உயிர் சொல்லின் முடிவில் இறக்கும்

அவள் கண்கள் என்ற கடலில்
பயணம் செய்யும் நானும்
அவள் காதல் இல்லை என்றால்
என் பயணம் முடியுமே

காதல பழிச்சி பேசிட காதலின் எதிரியும் இல்ல
காதல அழிச்சி போனவ என் காதலி இல்ல

வேணாம் மச்சான் வேணாம்
இந்த பொண்னுங்க காதலு

எழுதியவர் : Golden Prabhuraj (20-Jul-12, 6:57 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
Tanglish : VENAM machan VENAM
பார்வை : 332

மேலே