பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..

குயிலின் குரலை
தேனில் கலந்து!..
கிளியின் பேச்சை
சந்தனத்தில் குழைத்து!..
ஓடும் காற்றை
ஒரு கணம் பிடித்து
உன் முகவரி கொடுத்து!..
பூவின் வாசத்தோடு
புல்லாங்குழல்
வாழ்த்து ஊத!..
நான்
காற்று சுமந்து வரும்
வாழ்த்தை வரவேற்று
அவ்வாழ்த்தை போலவே
உன் வாழ்க்கை இருக்க
உன் வாசலில்
கவிதை கோலமிடுகிறேன்!..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!..