நீ பிறந்த இந்நாளில்!..

நீ பிறந்த இந்நாளில்
உன் கனவுகள்
நிஜமாக
நிலவொளியில்
நட்சத்திரங்கள் தவமிருக்க!..

நீ பிறந்த இந்நாளில்
உன் ஆசைகள்
அரியணையேற
கடல் அலைகள்
அயராது உழைக்க!..

நீ பிறந்த இந்நாளில்
உன் துன்பம்
தோல்வியுற
மேகங்கள் வெற்றிக்கு
வியர்வை சிந்த!..

நீ பிறந்த இந்நாளில்
உன்னுள் கவலை
கண் திறக்காமல் இருக்க
ஒளிந்திருக்கும் மின்னலும்
கண் சிமிட்டி
காவல் காக்க!..

நீ பிறந்த இந்நாளில்
உன் வாழ்க்கை
வாடாமல் இருக்க
உடன் இருக்கும்
நானும்
உன் தோல் தட்டி
வாழ்த்துகிறேன்!..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!..

எழுதியவர் : Rajankhan (20-Jul-12, 7:25 pm)
சேர்த்தது : Rajankhan
பார்வை : 300

மேலே