பிறந்தநாள் கவிதை!..
அதிகாலை சூரியன்
அவசரமாய் எழுந்து!..
அசைந்தாடும் தென்றலை
அன்போடு அழைத்து!..
சுகமான குளிரையும்
சுமந்து கொண்டு!..
இரவு நிலவும்
பகலிடம்
அனுமதி கேட்டு!..
வரிசையாய் நின்று
வாழ்த்து சொல்ல!..
நான்
வழி கொடுத்து
காத்திருந்து
உன் காலம் சிறக்க
கவிதையில் வாழ்த்துகிறேன்!..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!..