படைப்போம் புதுவானம் வாடா....

மன மெண்ணியே...
மகிழ்ந் தாடும்...

மன மெண்ணியே...
வாடும்...மடிதேடும்...

மன மெண்ணியே...
மண் நாடும்.

இதுவோர் வாழ்க்கைச் சிறையோ
வருகை வரிசைமுறையோ

வரிசையி லுள்ளோர்
வரலாற் றிலில்லார்
வரலாறு கொண்டோர்
வரிசையி லில்லார்

ஆக
வரிசை பாடாது....
ஏடு மெழுதுகோலும்
எடுத் தெழுந்துவா
எம்தோழா

சிந்தைச் சிறையுடைத்து
புதுச் சிறகுகள்கொடுத்துப் -
படைப்போம் புதுவானம் வாடா...

- A . பிரேம் குமார்

குறிப்பு:
இப்படைப்பை எழுத்தத் தூண்டுகோலாக இருந்த தோழர் ஐயா எசேக்கியல் அவர்களுக்கும் (அவர் கருத்தை, கவிதைவடிவில் படைத்தார்; அதைப் பார்த்ததும், அந்நேரம், எனக்கும் என்கருத்தை கவிதைவடிவில் தர மனம்கூறியது), நண்பர் ரௌத்திரன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எழுதியவர் : A. பிரேம் குமார் (20-Jul-12, 10:57 pm)
பார்வை : 271

மேலே