எல்லாம் உன் வசம்

இரவும் பகலும்
விழித்திருக்கும் போதும்
உறங்கும் போதும்
உன் வசம்
உன் செயல்பாடு!

பிறரை அறிந்து கொள்வதைவிட
தன்னை அறிந்து கொண்டு
செயல்படுவது எதனையும்
உன்னிடமிருந்து
எடுத்துக் கொள்ள முடியாது
யாராலும் !

வெற்றியோ தோல்வியோ
விதைகளை வீசிவிடு
வானத்தில் பறக்கும் பலூன் போல !

தோல்வியாக இருந்தால்
அங்கேயே மிதக்கட்டும்
வெற்றியாக இருந்தால்
உன் வசம் வந்து சேரட்டும்
எல்லாமும் உன் வசமே !

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jul-12, 8:58 am)
Tanglish : ellam un vasam
பார்வை : 482

மேலே