[297 ] படித்ததும் வெடித்தது..[01 ]

இதில் இனி வரப் போகும் பாடல்கள் நான் எழுத்துத் தளத்தில் பிறர் கவிதைகளைப் படித்தவுடன் என்னுடைய மனத்தில் தோன்றிய எண்ணங்களே. சில அப்படி நான் படித்த கவிதைகளை இப்படி மாற்றி எழுதியிருக்கலாமோ என்ற வகையில் தோன்றியதாகக் கூட இருக்கலாம். அல்லது அதனால் என்னுள் எழுந்த ஒரு மாற்றுக் கருத்தாகக் கூட இருக்கலாம். சிலர் இதனை இயற்கையில்லாத செயற்கை என்று கூடக் கருதலாம். என்னுடைய வேண்டுகோள் : முடிந்த வரையில் நான் படித்த கவிதைகளின் தலைப்புக்களைக் கொடுக்க முயற்சி செய்துள்ளேன் ;ஆதலால் அந்தக் கவிஞர்களின் அப்படைப்பையும் நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்பதே!-நன்றி எசேக்கியல்
------- ---------- ----------- ----------- -----------
Dr.K.V.Kanniappan அவர்களின் 'திரு ஏடகம்-பதிகம் 4 ஐப் படித்த போது:

வாசனைக் கலவைப் பூச்சு
...வாய்த்த,நல் உமையி னாளைப்
பேசினார் ஏழை என்றே!
...பிறங்கு,ஒளிக் கூந்தல், மேனி
கூசிடப் பிறர்க்குக் காட்டும்
...குறிப்பினார், இன்று தம்மேல்
பூசிடும் பொருட்கள் கண்டே
..புகலவோ ஏழை என்றே!

ஈசனே! எங்கே செல்வோம்?
...இதுவும்,உன் விளையாட் டாமோ?
தேசமே! வளர்ச்சி என்று
..திறந்து,நீ விட்ட தென்ன?
வேசமும், பூச்சும் சேர்ந்த
...வினைகளும் தொடரத் தானோ?
நாசமும் என்ன என்னோ?
..நாமிதைப் பார்க்கத் தானோ?
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (21-Jul-12, 10:39 am)
பார்வை : 293

மேலே