வேண்டும்!

சிலை வடிக்க
சிற்பி வேண்டும்!
சித்திரம் செய்ய
ஓவியன் வேண்டும்!
நிலம் செழிக்க
மழை வேண்டும்!
நெஞ்சுக்கும்
நீதி வேண்டும்!
கலை மலர
கற்பனை வேண்டும்!
கவிதைக்கு
கன்னித் தமிழ் வேண்டும்!
எல்லாவற்றையும்
தேடுகின்ற
தேடல் பார்வை என்றும் வேண்டும்!