அம்மா............. வா மா.....................

ஷ்..ஷ்..சப்தம் போடாதே தென்றலே...
என் அம்மா உறங்குகிறாள் !

கத்தாதே குருவியே பாடாதே குயிலே..
என் அம்மா உறங்குகிறாள் !

வெளிச்சமாய் வராதே நிலவே
சீக்கிரம் மேகத்துள் ஒளிந்துகொள்..
என் அம்மா உறங்குகிறாள் !

எங்களுக்கு கட்டளையிடும் அளவிற்கு
... உன் அம்மா உயர்ந்தவளா
என கேட்கிறாயா காற்றே ?

ஆம்..அவள் எவ்வளவு உயர்ந்தவள்
என உனக்குப் புரியாது.. எனக்கும்தான்.

"அம்மா எழுந்து வா மா சீக்கிரம்..
உனக்காக காதிருக்கிறேன்..
'எனக்காக வா மா..
உன் தூக்கம் கெடுக்காமல்,
உன் அமைதியை மாற்றாமல்
உன் உணர்வை,உடல் நிலையை புரிந்து
உனக்குப் பிடித்த மகளாய் வாழுகிறேன் அம்மா
வா மா.. எழுந்து வா..

உன்னை அலட்சியப்படுத்தி
உன் வேதனையை கேலியாக்கி
அக்கறையும்,பாசமும் கொண்ட
உன் உணர்வுகளை
புரிந்துகொள்ளாமல்
உன் வாழ்க்கையை ரணமாக்கியவள்
உன் நேசத்தையும்,பாசத்தையும் உணர்ந்து
'நீ எனக்கு வேண்டும்' என
அழைக்கும் பொது,

இப்படி 'கல்லறையில்'உறங்குகிறாயே அம்மா..!

எழுதியவர் : சுகி (21-Jul-12, 1:05 pm)
Tanglish : amma vaa maa
பார்வை : 265

மேலே