கோடி

அண்டம் கோடி அதில் விழும் பிண்டம் பலகோடி
இருப்பது பலகோடி இனி வருவதும் பலகோடி

கிட்டினர் கோடி... காடிக்கு பட்டினியர் கோடி
தாடிகள் தேடி அடிகள் ஆக்குவோரும் கோடி

தோடிகள் நாடி... இலயிப்போர் கோடி
கோடிகர் கோடி... கோடி ஈட்டுவோர் கோடி
கோடிப் பருவந் தனில் கோட்டிகள் கோடி

தெருக்கோடி தனில் பேடிகளும் வாடி

கோடிகளோ கேடிகளையே நாடி - இனி
கோடிதனில் புரள்வதும் யார் யாரோ

குறிப்பு :
********
கிட்டினர் -- உறவினர்
காடி -- புளித்த கள்
அடிகள் --- சாமியார்(ஆச்சாரியார்)
தோடி ---- இராகம், பண்,கர்நாட்டிக்
கோடிகர்-- நெசவாளர்
கோடி ---- புதுத்துணி(சீலை)
கோடிப்பருவம் -- இளமைப்பருவம்
கோட்டி -- துன்பம்,பகடி,விகட கூத்து,அழகு
பேடி ---- அலி, அச்சமுடையவன்

எழுதியவர் : பிரகாஷ்சோனா (21-Jul-12, 4:51 pm)
சேர்த்தது : prakash sona
பார்வை : 229

மேலே