[300 ] படித்ததும் வெடித்தது..[04 ]
கவிதை: 'மாற்றுதிறனாளிகள் !உலகை மாற்றும் திறமைசாலிகள்'
எழுதியவர்: T.Sivabalan
எழுத்தில் படித்ததும்
இதயத்தில் வெடித்தது:
...முதலில் எழுதிய
கவிஞரைப் போற்றுமின்!
...இதனைப் பின்னர்
எடுத்தே படிப்பீர்!:
------------
உணர்வை மறைத்துப் பழகும் உள்ளம்
உனக்குள் இராது பார்ப்பாய்!
உழைப்பைத் திருடி வளரும் நெஞ்சம்
உனக்குள் எழாது வளர்வாய் !
பிழைப்புக் காகப் பிறரை ஏய்த்துப்
பிடுங்கி வாழும் நினைப்பு,
கெடுத்து உயரும் இச்சை -பிறரைக்
கீழ்மைப் படுத்தும் பேச்சு,
எடுத்துக் கொடுக்கும் கையை -இடை
இருந்து தடுக்கும் போக்கு,
படுத்துக் கெடுத்த பின்னால் -கை
பதறி விலக்கும் போக்கு -இவை
விடுத்து வாழப் பாரு! -ஊனம்
விலக்கிக் கொள்வாய்! தேறு !
-௦-