திருமண நாள் வாழ்த்துக்கள்

ஐந்து ஆண்டுகால அனுபவத்தில்
கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை..

வாழ்க்கை வானில் சேர்ந்து
பறக்க சிறகை விரிக்கும்
வானம்பாடி பறவைகள் நீங்கள் ...

வரும் காலமும், வரப்போகும் காலமும்
சுற்றத்தோடும் நட்போடும் அமைய
நம்பிக்கை சிறகுகள் முளைத்து
வானம் தாண்டி பறந்து செல்லும்
வெற்றி பறவைகள் நீங்கள் ...

வெயில்,மழை , புயல்
என எத்துனை இடர் வரினும்
இன்முறுவல் மாறாத
இன்முகத்தோடு
எளிமையும் வளமையையும்
சேர்த்து வாழ்வீராக ...

உனக்காக உன்னவளும்
உனக்காக உன்னவனும்
என்று தொடங்கி
நமக்காக நாங்கள்
என்று நினைவு கூறும்
இன்னாள், நன்னாள்
பொன்னாள்...
ஆம் இது உங்கள் திருமண நாள் ...

கெட்டிமேலம் முழங்க
ஊர்கூட்டி விருந்து வைத்து
ஐயும் பூதங்களையும்
சாட்சியாக்கிய தருணங்கள் ...

நினைவுகளை அசைபோடும் போதே
எண்ணிலடங்க நினைவலைகள்
அலைகடலென மனதின்
ஓரத்தையும் மனிதர்களையும்
தொட்டு செல்கிறது ...

இன்பமோ துன்பமோ
லாபமோ நட்டமோ
இன்று போல என்றும்
காதல் வானில் பறந்து செல்ல வாழ்த்தும்
தியாகராஜன் வேடந்தாங்கல்
உங்கள் வருகைக்காகவே
கடைக்கண் சாயாது காத்திருக்கும்...

இந்நாள் போல
எந்நாளும் மலர
வாழ்த்தும் உங்கள் நண்பன்
தியாகராஜன் ....

எழுதியவர் : க பரமகுரு (24-Jul-12, 2:10 am)
பார்வை : 57946

மேலே