தோழி அவள் பாதங்கள்

தோழி அவள் பாதங்கள் - நான்
தொழுதிடும் எழில் வேதங்கள்

காரணம் யாதெனக் கேளுங்கள் - அவர்
பாராட்டும் பாங்கைப் பாருங்கள்
====================================
ஹரி உங்கள் எழுத்துக்கள் இப்போதெல்லாம் புடம் போட்ட தங்கம் போல மிளிர்கிறது ........தொடர்ந்ந்து இது போல எழுதுங்கள்......

உங்கள் திறமையை நல்ல முறையில் பயன் படுத்துங்கள்.....உங்கள் திறமை பயிருக்கு பாயும் தண்ணீராக இருக்க வேண்டுமே தவிர களைக்கு பாயும் தண்ணீராக இருக்க வேண்டாம் என்பதே எனது மேலான வேண்டு கோள்....திறமை நல்ல விதை போல எங்கிருந்தாலும் முட்டி வெளி வந்து தான் தீரும்.......ஹரி அருமையான கவிதை கீப் இட் அப்
========================================

மனதை திறந்து பாராட்டுவதும்
மகத்தான இனிய கவிதை அன்றோ...?

மங்கை அவளது அறிவுரைகள் - என்
முன்னேற்றத்திற்கான தெளிவுரைகள்.....!

தட்டிக் கொடுப்பதும் ஒன்று
தன்னம்பிக்கை வளர வைப்பதும் ஒன்று

என் திறமை எனக்கே தெரியாது
என் உயிர்த் தோழி அவருக்கே தெரியும்.....

A - தையோ கிறுக்காதே
B - டிக்க வில்லை என்பார்.....!
C - றப்பாய் கவி எழுது - உன்
D - கினிட்டி என்னாவதென்பார்....!
E - டிச்ச புளிபோல்
F - படி நீ எழுதுறே...?
G- வன் எழுத்திலே இருக்கணும் என்பார்...!
H - ARI நீ எனது தோழன் என்பார்...!
I - ஸ்வர்யம் நமது நட்பு என்பார்...!
J - யிக்க முடியும் உன்னால் என்பார்...!
K - ள்வி ஞானம் உனக்குண்டு என்பார்...!
L - லாம் இனிய பொழுது என்பார்....!
M - மாத்திரம் சவால்கள் என்பார்....!
N - ன்னை உணர வைத்தார்.....!
O - ஹோ என உயர வைத்தார்.....!
P - கு பண்ணாதே கர்வம் பிடித்தவனே என்பார்..!
Q - ட்டாகவே சண்டையும் போடுவார்....!
R - ரும் நமை வெல்ல முடியாது என்பார்...!
S - என்றே கருத்து ஆமோதிக்க வைப்பார்...!
T - க்கானது தமிழ் மொழி என்பார்...!
U - ஆர் ஆல்சோ தமிழ் போல் கிரேட் என்பார்...!
V - ஆர் தி இலக்கணம் ஆப் நட்பு என்பார்...!
W ( டபுள் யு ) - உனக்குள்ளே ஒரு கவிஞன் என்பார்.!
X - ரே என் மனசுக்குள் எடுத்தேன்......!
ZEBRA வண்ண கோடுகளுக்குள்

சிரித்துக் கொண்டிருந்தார் என் தோழி.......!

( Y - என்ற கேள்விக்கே இடமில்லை
ஒருமித்த நினைவுகளே இனிக்கின்ற நட்பு...! )

எழுதியவர் : (24-Jul-12, 1:56 am)
பார்வை : 807

மேலே