மதம் பிடித்த மனங்கள்...

மரணத்தின் மடியில்
மௌனித்த இரு மனங்கள்,

காதல் ரோஜா
அன்பை போதித்த அழகு
அழகாய் போதித்த அறிவு
முட்களின் கருவறை பிரசவித்த
முழுமதி
அணைகளால் அடைக்கப்பட்ட
ஆற்று வெள்ளம்

யார் யாருக்கோ கனவு
யார் யாருக்கோ கற்பனை
நமக்கு காப்பியம்
உயிர் பறித்த ஓவியம்

வாலிப சோலையில்
வண்ண சிட்டாக சிறகு விரித்தோம்
இரவும் நிலவும் போல
சேர துடித்தோம்
உடலும் உயிரும் போல
வாழ நினைத்தோம்
கற்பனை வானில்
கனவு சிட்டுக்களாக
காவியம் கடந்தோம்

காதலர்களாய் சேர
கருவினில் மதம் கொண்டோம்
மதங்களால் இன்று
கண்ணீர் பூக்கிறோம்
காதல் மதத்தை பார்கவில்லை
மதம் காதலை ஏற்கவில்லை

சேர துடித்து
மரணத்தாயை முத்தமிட்டோம்
ஏமாற்றம்
உன்னை புதைத்தது சிலுவை
என்னை எரித்தது சிவம்

எழுதியவர் : jannanaram (24-Jul-12, 8:38 am)
பார்வை : 208

மேலே