வலிகள் நிறைந்த தமிழின போராட்டம்

தமிழ் ஈழ காணவேண்டி நாங்கள் கொண்டிருக்கும்
எங்கள் பயணம் வலிகள் நிறைந்தது
தன்னிகரற்ற தலைவர் காந்தியின் வழியில்
அறப்போராட்டம் தொடங்கினோம்
எங்களை கோழைகள் என்றெண்ணி
ஓநாய்கள் ஆட்டமிட்டன
எங்கள் உயிர்களை பறித்தன
எங்கள் உடமைகளை தனதாக்கி கொண்டன
ஒரு வீரன் ஒரு தலைவன் வரமாட்டான என்று எங்கள்
நெஞ்சு பதைபதைத்து கொண்டிருந்த தருணம்
சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாவீரனின் வழியில்
வந்தார் எங்கள் தலைவர் வே.பிரபாகரன்
நாங்கள்,
தனி நாடு கேக்கவில்லை
தனி மாநிலம் கேக்கவில்லை
மானமாக வாழ வழிகேட்டோம்
துரத்தி அடித்தன சிங்கள ஓநாய்கள்
ஆம் அரை நூற்றாண்டுகளாக எங்களை
துரத்தி அடித்தன சிங்கள ஓநாய்கள்
எங்கள் குருதியை சுவைத்தன
எங்கள் தாய் தந்தையரை கற்பிழக்க செய்தன
எங்கள் தந்தையரை எங்கள் முன்னே
மரண ஓலமிட செய்தன ஓநாய்கள்
இப்படி செய்தால் அழுதுகொண்டிருப்போம் என்று
கனவு கோட்டையில் மிதந்த ஓநாய்களுக்கு
எங்கள் இனம் அடிமை அல்ல என்று
பலமுறை போரில் உணர்த்தின எங்கள் கரும் புலிகள்
இருக்கும் ஒரு உயிர் ஏன் நாளை போகவேண்டும்
இன்றே போகட்டும் என் இனமானம் காப்பதற்காக
என்று எங்கள் புலிகள் பல லட்சம் பேர்
தங்கள் இன்னுயிரை ஈழம் காக்க விதைத்தனர்
உரிமை கேட்டு போராடி தோற்று போனோம்
இனியேனும் உயிமையை எடுத்து கொள்வோம்
என்ற முடிவுடன் எங்கள் பாச தலைவரின்
மடியில் தவழ்ந்த பிள்ளைகள் ஆயுதம் தாங்கினோம்
ஈழம் என்ற நாடு நம் தாய் நாடு என்றும்
சிங்கள ஓநாய்களிடமிருந்து அதை மீட்டெடுப்பதே
எங்கள் வாழ்நாள் கனா என்று போராடினோம்
வஞ்சக நரிகள் பல சிங்கள
ஓநாய்களுடன் சேர்ந்து எங்களை அடித்தன
தமிழனாய் விழுந்த நாங்கள்
கரும் புலிகளென எழுந்தோம்
பல லட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்
எங்கள் தாய்நிலத்தை இழந்துவிட்டோம்
இறந்து கிடந்த தாயின் மார்பில்
பால் தேடும் குழந்தைகளாய்
இறந்து கிடக்கும் குழந்தையை
எடுத்து மார்போடணைத்து அழுவதற்கு கூட
கண்ணீர் இல்லாதவர்களாய்
தாய் நிலத்தைவிட்டு விரட்டி அடிக்கபட்டோம்
மனித நேயம் பேசும் மனித பிதாக்கள்
போரில் தமிழ் இனமே கூண்டோடு அளிக்கப்பட்டு விட்டது
இதே போரில் ஒரு சிங்கள குடி மக்கள் கூட உயிர் இளக்கவில்லை
என்ற உண்மையை கூட ஏற்கவில்லை
போர்குற்றம் என்று சொல்லி உண்மையை மறைக்கிறார்கள்
இது ஒரு இன படுகொலை என்பதை ஏற்க மறுக்கிறார்கள்
வஞ்சகர்களின் வலையில் சிக்கிய நாங்கள்
வாழ வழியின்றி தவிக்கிறோம்
இருந்தும் உங்களிடம் உயிர் பிச்சை கேக்கவில்லை
எமக்கான விடுதலையை கட்டி எழுப்ப முடியும்
என்ற துணிவு இப்பொழுதும் எமக்கிருக்கிறது
எங்கே எமக்கான நடை அடைந்து விடுவோமோ என்ற
சிங்கள ஓநாய்களின் பயத்தை எங்களால் உணர முடிகிறது
எம்தலைவர் சோர்ந்து விடவில்லை
அவரின் பின்னால் கரும் புலிகள் நாங்கள் நிற்கின்றோம்
ஈழம் உதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை
எமக்கான தேசம் புதிய விடியலுடன் எமக்காக காத்திருக்கிறது
சிங்கள ஓநாய்களே அவர்களிடம்
வாங்கி தின்று உடல் வளர்க்கும் நரிகளே
எம் தேசம் உதிக்கும் நாள் உங்கள் தேசம் அஸ்தமனம் ஆகும்
எங்கள் தாய் விட்ட கண்ணீர்
எங்கள் தங்கையின் ஓலக் குரல்
விதைகளாய் விழுந்த எங்கள்
பாச சகோதரர்களின் / சகோதரிகளின் குருதி
இவற்றிற்கு நீங்கள் பதில் சொல்லும் நேரம்
எங்கள் தேசம் உதிக்கும் நேரம்
இதோ மேற்குதிசையில் பாருங்கள்
எங்கள் தலைவன் வரவு
அவருடன் வரும் புலிகளை பாருங்கள்
எங்கள் மானம் காக்க தலைவன் வந்து விட்டார்
சிங்கள ஓநாய்களே ஓடி பதுங்கி கொள்ளுங்கள்
இல்லையேல் ஒருவர்குட உயிர் பிழைக்க மாட்டீர்
ஈழம் பிறக்க இருக்கும் புது விடியல் எங்கள்
கண்களில் தெரிகிறது இதுவே எங்கள்
இறுதி துளி கண்ணீராக இருக்கும்
தமிழ் ஈழ காணவேண்டி நாங்கள் கொண்டிருக்கும்
எங்கள் பயணம் வலிகள் நிறைந்தது
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்