என் வீட்டு ரோஜாப் பூக்கள்

என் வீட்டு
ரோஜாப் பூக்களையாவது
ஒரு முறை
வந்து பார்த்து
விட்டுச்செல்!
அதற்கு நான்
தண்ணீரை
ஊற்றும் போது கூட
உன் நினைவில்
கரைந்து
போகிறேன்!
வேர்கள் உறுதியாகும்
போது நம்
காதலின்
வெற்றியை
நினைத்துக் கொள்கிறேன்!
பூக்களைக் காற்று
வருடினால் கூட
உன்னை தீண்டுவதாய் நினைத்து
கோபமுறுகிறேன்!
பூக்களை மட்டும்
பறிக்காமல்
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன். . .
என் எதிர்பார்ப்பை
உன்னிடம்
பூக்களாவது
சொல்லுமென்று!
அதனால் தான்
சொல்லுகிறேன்
என் வீட்டு ரோஜாப்
பூக்களையாவது
நீ ஒருமுறை
வந்து
பார்த்து விட்டுச்
செல்!

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (24-Jul-12, 9:29 pm)
சேர்த்தது : Soundaryaa
பார்வை : 224

மேலே