பரிணாமம்
அந்த
உளிக்குத் தெரிந்திருக்காது
தான் பாறையைப் பிளப்போமென்று...
பாறைக்குத் தெரிந்திருக்காது
தான் சிலையாவோமென்று
தெரியவில்லை சிலைக்குத்
தன்னில் கடவுள் உண்டென்று..
கடவுள் அறிந்திருக்கவில்லை
மனிதன் தன்னை கல்லாய்
படைப்பானென்று
ஆனாலும்
தெரிந்திருக்கின்றது மனிதனுக்கு
உளி ,பாறை, சிலை,
கூடவே
பாலும் கரண்டியும்
பிள்ளையாரும்.