சகுனம்..(மினி கதை)

பத்து பதினைந்து வீடுகள் அணிவகுத்து நிற்கும் வளவு சேர்ந்த்த இடத்தில் அவனது வீடு இருந்தது.அந்த வீடுகளில் ஒரு வீட்டில் தாமரை இருந்தாள்.

தாமரை கணவனை இழந்த கைம்பெண்.அவன் அதிகாலையிலே நடை பயிற்சிக்கு செல்லும் வழக்கம் உள்ளவன்.
அநேகமாக அவன் வீட்டை விட்டு வெளியே வரும்போது அந்த அதிகாலை கருக்கல் கலைந்திருக்காது. கவிந்திருக்கும் கருப்பு வெளிறி வரும் காலை நேரத்து இருட்டும்,மென்மையாய் வருடும் இதமான காற்றும் அவனை ஒரு புது உலகத்திற்கே இழுத்துச் செல்லும்.
அப்படிப்பட்ட நேரத்தில் நடை பயிற்சி செய்வதே தனி சுகம்தான்.
பெரும்பாலும் அவன் வீட்டை விட்டு வெளியே வரும் போதெல்லாம் தாமரை தான் வெளியே உள்ள குழாயில் நீர் பிடித்துக் கொண்டிருப்பாள்.
குழாய் ஒரு ஓரமாக இருந்தாலும், அவனைக் கண்டதும் தாமரை சற்று தள்ளிப் போய் மறைவாக நின்று கொள்வாள்.
அவனுக்கு வருத்தமாக இருக்கும் . தான் ஒரு விதவை என்பதால்தானே ஆடவன் என்னைக் கண்டதும் தாமரை போய் ஒளிந்து நிற்கிறாள்.
காலம் எவ்வளவோ மாறி போனாலும் தாமரை மாதிரியான பெண்கள் இன்னும் பத்தாம் பசலித்தனமாகத்தானேஇருந்துகொண்டிருக் கிறார்கள்.
தனக்குத்தானே வருந்தி கொள்வான் அவன்.

ஒரு நாள் தாமரையும் அவனும் நேருக்கு நேர் மோதி கொள்வது போல் நேர்க்கோட்டில் சந்திக்க வேண்டியது ஏப்பட்டது.
நீ ஏன் சகோதரி மாதிரி. என்னை கண்டு ஒதுங்க வேண்டியது எதுவும் இல்லை. இனி அப்படியெல்லாம் செயாதே என்றான் அன்புடன்.
அவனை சற்று ஆழமாக ஊடுருவி பார்த்த தாமரை பதில் ஏதும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள்.
அவனுக்கும் மனதுக்கு திருப்தியாக இருந்தது.

அந்த இடத்தை விட்டு சற்று தள்ளி சென்றதும் தாமரை தனக்குத் தானே சொல்லிக்கொண்டால் "இவரைக் கண்டு யார் ஒதுங்கியது/ இவர் முகத்தில் முழித்த நாள் பூராவும் எனக்குஇல்லே மோசமாக அமைந்த்திடுது" என்று.

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி-6 (24-Jul-12, 10:15 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 230

மேலே