எழுப்பாதீர்கள் அவனை..

உறங்குகிறான் அவன்
எழுப்பாதீர்கள் அவனை
உறங்கட்டும் விடுங்கள்
விழித்தெழ வைக்காதீர்கள்

வராத உறக்கம்
அவஸ்தை.....
வந்துவிடும் விழிப்பு
சந்தோஷ அழிப்பான்......
வந்துவிட்ட உறக்கத்திற்குள் மட்டும்
அவன் மனிதன்

விடுங்கள்,அவன் உறங்கட்டும்

விழித்தெழுந்து விட்டால்
மனிதனாய் அவன் இல்லாமற்போக
அவனுக்குப் போதுமானவை::
நித்தி, மீனவர் கைது, பெட்ரோல் விலை,
காவிரி,....

எழுதியவர் : அகன் (24-Jul-12, 9:22 pm)
பார்வை : 305

மேலே