இரவுக் கவிதை காமத்தின் இரவல் கவிதை
உன் கைபிடித்த
நாளிலிருந்தே
என் கவியேடு
காணாமல் போனது!
இனி ஒருபோதும்
ஏடு பிடிக்கப் போவதில்லை
உன் இதழில்
ஏர் தொடுக்கப் போகிறேன்
முத்தப் போர்
தொடுக்கப் போகிறேன்!
சங்கு கழுத்தில்
சண்டையிட்டு,
பின் காதோர முடியில்
கசிந்துருகி,
முதுகில் முகாமிட்டு
முன் திருப்பி
புரளும் மார்பில்
முகம் புதைக்கிறேன்
முழுதும் என்னை
நானே சிதைக்கிறேன்!
உன்
மெல்லிடை தொட்டு
மென்று தின்று
தொப்புளின் கீழ்
தொடங்குகிறது ஆட்டம்!
.........................................

........................................

வேண்டாம்
வெட்கமாய் இருக்கிறது!