ஒருவரி கவிதை

------- ஒருவரி கவிதை ------

கண்மை - ஒற்றை விரல் ஓவியம்.

கண்கள் - சிப்பிக்குள் கருப்பு முத்து.

முத்தம் - சிவப்பு சாலையில் சின்ன சின்ன விபத்து.

சிரிப்பு - வேதனைக்கு எதிரான வெள்ளை கொடி போராட்டம்.

காதலி - நினைவு குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டுகிறவள்.

காதல் - தங்க சங்கிலியில் தொங்குகிற சைனைடு குப்பி.

தோல்வி - இலைகளற்ற போதிமரம்.

வெற்றி - தோல்விகளின் தொழிற்ச்சாலை.

நண்பன் - தாகம் தணிக்கும் தாய் மார்பு.
நண்பன் - உன் மார்புக்கு வெளியே துடிக்கும் இன்னொரு இதயம் .

தந்தை - மரணம்வரை உருகும் மனித மெழுகுவர்த்தி.
தந்தை - நாலு சுவருக்குள் ஒரு நாட்டமை.

தாய் - சமையலறை சாமி
தாய் - சிலுவை சுமக்கும் பெண் ஏசு.

கவிதை - பேனா காம்பில் பூத்த ரோஜா.
கவிதை - பேனா பிரசவித்த பெண் குழந்தை
கவிதை - சொற்களுக்குள் சொர்க்கம்.

புரட்சி - எளிதில் நிகழும் அசாத்தியம்.
புரட்சி - பிடிவாத பாறைகளை பிளக்கும் சின்ன உளி.

போராளி - தவிக்கும் மக்களுக்கு தாய்.
போராளி - மாற்றத்தை நிகழ்த்துகிற மற்றுமொரு மனிதன்.

தமிழ் - மொழிகளின் மனச்சாட்சி
தமிழ் - மொழிக்கு கிடைத்த மோட்சம்.
தமிழ் - உச்சரிக்கும் போது உற்பத்தியாகும் அமுதம்.

--- தமிழ்தாசன் ---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (1-Aug-12, 10:49 am)
பார்வை : 725

மேலே