மது

மது
என்னிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்துகிறது.
ஒவ்வொரு முறை
மது அருந்தும்போதும்
கோப்பையில்
என் நிர்வாணப் பிம்பத்தைக்
காண்கிறேன்.
மது,
கார்மேகக் கூட்டத்தையும்
ஈரக் காற்றையும்
ஒரு பாலைவனத்தில்
எனை அமர்த்திக்
காட்டிவிடுகிறது..
என்னுள் யாதுமாகி
என்னை ஏதுமற்றதாய்ச்
செய்துவிடுகிறது..
மது
என்னை மீட்டெடுக்கையில்
தாகத்துடன் விழித்துக் கொள்கிறேன்
நடு இரவில்......