அறிவியலின் அனுதாபங்கள்-2
பொக்கைவாய்க்கும்
பளுப்பு நிறப் பல்லுக்கும்
பல மீட்டர்கள்-ஆகையால்
ஒளிச்சேர்க்கையில்
தடங்கள்!...
தெருமுட்டத்தில்
ஓர் மைல்க்கல்-
திகைத்து நிற்கிறது
நிலவுக்குப்போக
வழி தெரியாத ஏவுகணைக்கருப்பர்!.
இத்தாலியில் எலுமிச்சை பழம்-ஹிட்லர் செய்து வைத்த
செய்வினை
கண்டுபிடிப்பு!
நாளை மக்கள்
தொகை கணக்கெடுப்பு-
இந்தியா-சீனா
ஒப்பந்தத்தில் கையொப்பமிட வருகிறது
சுனாமி!...
இமயமலையில்
ஏணிப்படிகள்
அமைத்துத்தர போராட்டம்-சோம்பேறி
ரசிகர் மன்றம்!
மனத மூளையில்
வெடிப்புகள்-
சேட்டிலைட்டுகளின்
சமிக்ஞை ஒலியில்
தெரியும் எல்லைக்கோடுகள்!...
மவுண்ட்பேட்டன்
எழுதிய பேனாவில்
முகமதுஅலி ஜின்னாவின்
சிறிய கீறல்-
பாகிஸ்தான் தனிநாடு!...
ஹைட்ரஜனின்(H 2) புதிய
சிறைச்சாலை-கியாஸ்
சிலிண்டர்கள்!...
கந்தகஅமிலம்
ஓர் களவாணி-சண்டையைமூட்டிவிட்டு
சாமர்த்தியமாய் வாழும்
வினையூக்கி!...steroid
கால்(1/4)பகுதி சூரியனின், கரைசலில்
உருகும் உலோகம்,
டங்ஸ்டன்,
டங்ஸ்டன் என்னும்
கண்ணில், தெரிகிறது-
தாமஸ் ஆல்வா எடிசனின் சொப்பனம்!.
வறுமையென்னும்
கண்ணில் தெரிகிறது-
அப்துல்கலாமின் சொப்பனம்!...
மின் உபரியால்
ஔவையார் வீட்டில்
ஆத்திச்சூடி தெரிகிறது-
பௌணர்மியில் குஜராத்!
IMEI எண்ணைக்கேட்டு
யுவான்சுவாங் முதன்முதலாய்
இந்தியா வருகை-சீனத்தளபதி செல்லிடப்பேசியில் வேண்டுதல்!
மது அருந்திய
இந்தியக்குடியரசுத்
தலைவர்
தகுதியற்றவர்-அமெரிக்கப்பிரசிடென்ட்
ஆபிரகாம் லிங்கன்
கண்டனம்!
அணுவைப்
பிளந்தேன்,எனக்கு
அணுமின் நிலையத்தில்
வேலையில்லை
வறுமையில் வாடும் டால்டன்-முன்னால் தடகள வீராங்கணை
சாந்தியின்
கண்ணீர்க்குமுறல்!..
இரத்தத்தில் சர்க்கரை
(80-110 mg/d1)
கூடிவிட்டதால்
கரும்புக்காடுகள் நீக்கம்-
அரசவையில் தீர்க்கம்!
பாரியின் பேச்சைக்கேட்டு
"பறம்புமலை"யை
விட்டோம்,ஆகையால்
காரியும் ஓரியும்
பன்னாட்டுடன்
ஒப்பந்தம்-
வெறிச்சோடிகிடக்கும்
முல்லைத்தேரின்
மூட்டு ஒடிந்த கால்கள்!
கூலிட்ஜ்குழாயில்
குடிமி சாமிகள்-
கண்மாயில் கிடக்கும்
கழிவுத்தண்ணீர்
நித்யானந்தா
அள்ளித்தெளிக்கும்
பன்னீர்!...ஆகையால்
கூலிட்ஜ்க்கு கடும்
கண்ணீர்!...