நீ மாறிவிட்டாய்

"நீ மாறிவிட்டாய்!!"
உறவுகள் பிரிவிற்கு
எடுத்துவைக்கும் முதல் படி!

இந்த காதலில்
வரட்சி காலத்தில்
விழும் முதல் இலை
இந்த வார்த்தை!

ஆருகாமைகளின் சந்தோசங்களை
விட
பிரிவுகளின் வலிகள்
அதிகமே!

பிரிவுக்கு முன்னுரை
எழுதுவதை விட்டுவிட்டு
வாழ்கைக்கு பொருளுரை
எழுதுங்கள்!

பிரிவுகள்
கொடுமை இல்லை!
பிரிந்த பின்
அந்த
நினைவுகள்
ஏற்படுத்தும் சலனம்
ஆழிப் பேரலையை விட
அதிகமான பாதிப்புகளை
மனதில்
ஏற்படுத்தும்!

எழுதியவர் : சரவணா (4-Aug-12, 10:34 am)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 298

மேலே