காற்றோடு கரைவோம்

நண்பனே பிரிவு என்பது நமக்கு புதிதல்ல,
அதுவும்
மிகத் தூரமும் அல்ல !
எங்கே இருந்தாலும் !
எப்படி இருந்தாலும் !
நாம் ஒரே காற்றை தான் சுவாசிக்கிறோம்!
எனவே பிரிவு நம்மை பிரிப்பதற்கல்ல,
மாறாக
அது நம்மை பற்றி தினமும் நினைப்பதற்கே!
எங்கே? நாம் இருக்கிறோம் என உனக்கு தெரிகிறதா,
நாம் இருவரும்
காற்றோடு கரைந்துள்ளோம் !
எங்கேயும் !
எப்போதும் !
நம்
அழகிய நட்பின் நினைவுகளுடன்.