வழிகாட்டி மரம்

நல்வழிகாட்டி
மரமொன்று இங்கே
அதன் வழியில்
போவோர்தான் எங்கே?
**********************
கல்வியை
இலவசமாய் தந்தார்
இங்கே
கல்லாமை
இல்லாமல் செய்தார்

அணைகள் பல கட்டி
இன்னல்கள் பல நீக்கி
ஏழை விவசாயிகளின்
கண்ணீரைத் துடைத்தார்

வாழ்விலும்
நிர்வாகத்திலும்
எளிமையும் நேர்மையும்
இரு கண்களாக கொண்டார்
ஏழை மக்களின்
இதயங்களில் வாழ்ந்தார்

தலைவர்களில்
அவர்
பெருந்தலைவர்

தமிழர்களில்
அவர்
தவப்புதல்வர்
*****************************
நல் வழிகாட்டி
மரமொன்று இங்கே
அதன் வழியில்
போவோர்தான் எங்கே?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (8-Aug-12, 12:08 pm)
பார்வை : 212

மேலே