நிறுத்தக் குறியில்லா நெஞ்சின் நினைவுக் குறிகள்
நிறுத்தக் குறிகள் இலக்கணம் சொன்ன டாக்டர்
கன்னியப்பனுக்கும், அதற்கு அவள் வருவாளா
என்ற இலக்கியம் படைத்த வசந்தி மணாளனுக்கும்
நோக்கு வர்மம் எடுத்துரைத்த எனதருமை
நண்பர் கவிஞர் ராஜ ராஜ ராஜாதி ராஜ
ஈஸ்வர் தன்க்காட்டு ராஜாவுக்கும் இக் கவிதை
சமர்ப்பணம்
ஆட்டம் காணும் உடலிலும்
ஆடாது நிற்கும் இதயம்
உணர்ச்சிகளின் ஓட்டம்
நிற்பதில்லை
நோட்டம் குறைவதில்லை
கவிதை தீட்டாமல் கைகள்
நிற்பதில்லை
நோக்கு வர்மமாடா
நோய் தீர்க்கும் மருந்தடா
நிறுத்தக் குறி இல்லாத
நெஞ்சின் நினைவுக் குறிகளடா
---கவின் சாரலன்
Reference :
1 . நிறுத்தக் குறிகள் --கட்டுரை ----எழுத்து வலை
By DR V , K . KANNIUAPPAN
2 . அவள் வருவாளா --கவிதை --- "
BY வசந்தி மணாளன்
3 . நோக்கு வர்மம் ---கவிதை(நகைச் சுவை ) --- "
BY ஈஸ்வர் தனிக் காட்டு ராஜா
நோக்கு வர்மம் ----வர்ம பிடி பல. குஸ்தி
வாத்தியாரை அணுகி தெரிந்து கொள்ளவும்
நோக்குதலால் ---பார்வையால் பிடிக்கும் பிடி
நோக்கு வர்மம் அல்லது நோக்கு வர்மப் பிடி
இதற்கு ஆசிரியர்கள் தேவை இல்லை ஆயினும்
கவிஞர் வசந்தி மணாளன்,கவிஞர் ஈஸ்வரை
அணுகலாம் குருகுல வாசம் உண்டா தெரியாது
நோக்குதல் என்றால் விழியின் தாக்குதல்
என்பதுதானே பொருள் அந்த விழி தாக்குதலை
எதிர் கொள்ள முடியாமல் மார்க் அன்டனி
ரோம் சாம்ராஜ்யத்தையே கிளியோபாத்திராவின்
காலடியில் சமர்பித்தான்
நோக்கு வர்மத்தின் அளப்பரிய சக்திக்கு
சரித்திரமே சான்று