மழலை

ரெட்டை ஜடை ரிப்பனோடு
ரெக்கைகட்டி பறக்கும் மனசு;
துள்ளிதுள்ளி ஆட்டம் போட்டு
துயரமில்லா துடிக்கும் வயசு;

பள்ளிச் சீருடை அணிய அடம்பிடிக்கும்
அழுது அணிந்தவுடன் அழகில் சிவக்கும்;
விடுமுறை வேண்டி காத்திருக்கும்
விட்டுவிட்டால் கால்கள் குதிக்கும்;

சாக்லெட்டுக்காக சண்டை போடும்
கிடைத்துவிட்டால் கொடுத்து மகிழும்;
குறும்பு வேலைகள் எட்டிப் பார்க்கும்
கூட்டாஞ்சோற்றில் உறவு மலரும்;

விளையாடிக்கொண்டே கதைகள் கேட்கும்
வெகுளி வெள்ளத்தில் வெட்கம் வழியும்;
மழலை கேள்வியில் மகிழ்ச்சி ததும்பும்
சுட்டித் தனத்தில் உலகம் சுருங்கும்;

அள்ளி அணைக்கும் அன்பு வேண்டுமா?
முடிவு இல்லா முத்தம் வேண்டுமா?
ஊட்டும் ருசி உணர வேண்டுமா?
உண்மை அழகை ரசிக்க வேண்டுமா?

வயதில் வளர்ந்தோர் கற்றிடுவீர்
சிட்டாய் சிறகடிக்கும் சிறுவர் சிரிப்பில்;
வயது ஏறா வாழ்க்கை வேண்டுமா?
வெள்ளை சிரிப்பை தினம் விழியில் வைப்பீர்!!

எழுதியவர் : Baveethra (9-Aug-12, 3:00 pm)
சேர்த்தது : Baveethra
Tanglish : mazhalai
பார்வை : 278

மேலே