சின்னச்சின்ன வ(லி)'ரி'கள்

பூட்டப்பட்ட மனக்குமுறல்.

இப்போது இலகுவாய்
இருக்கிறது உனக்கு
வீட்டை நான் பாதுகாக்கிறேன்
சாவியை நீ பத்திரப்படுத்துகிறாய்
ஏ.......,உரிமையாளா
சாவியை தொலைத்த ஒரு நாள்
சண்டித்தனத்துக்கு வருவாய் நீ
அப்போது உணர்வாய் என் பலம்.

**--**
சலவைக்காறனிடம் ஒரு கேள்வி

அடித்து,துவைத்து
பிழிந்து முறுக்கி எடுக்கிறாயே
பாறையோ,ஆடையோ
உன்னுடயதென்றால்
இப்படி உபயோகிப்பாயா?

**--**
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (9-Aug-12, 4:03 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 339

மேலே