ராம் -4323
பத்து விரல்கள் விளையாடி
இருகண்கள் தொட்டு
கணிபொறியின் கர்வம் அடக்கும்
வித்தை தெரிந்த விஞ்ஜானி...
கடமை தவறாது
கண் இமை சாயாது
கார் இருள் மறைந்த பின்னும்
உன் பணி தொடர்ந்ததே
உண்ணும் நேரமும்
உனக்கில்லை
காது தொடும் சந்தேக கேள்விகளுக்கு
பதில் தந்தே பாதி நேரம்
கடந்து போகும்....
ராம் இருந்தால்
Ram இல்லாமலும்
ஸ்டீரிய வில் ஒருவேளை
machine இயங்கலாம்
இவன் எழுந்து நடந்தால்
லோட்டுடஸ் பூக்கள் வரவேற்கும்
sametime -ம் சல்லுயுட் அடிக்கும்
IBM ஐயப்படும்
symantech சின்ன பின்னமாகும்...
அவசரம் என்றால் 100 அலறும்
ஆபத்து என்றால் 108 அலறும்
steia வில் பிரச்னை என்றால்
நிச்சயம் உன் கைபேசி அலறும்
இப்படி கடந்து வந்த
தூரங்கள்-தான் எத்தனை எத்தனை...
system , லேப்டாப், லோட்டுஸ்
pgp , back up ,cctv
asset என நீ
தொடாத துறைகளே இல்லை...
உன்கரம் தொட்ட பின்னே
லேப்டாப் உயிர் பெரும்
உன் கண்கள் பட்ட பின்னே
pirinter சிரிக்கும்
உன் மேனி தொட்டு
உன் காற்றை சுவாசித்து
நீ தொட்ட தூரங்களுக்கும்
புகழுக்கும்
அந்த யுரேனஸ் தான் எல்லை ....
இரண்டெழுத்தில் ஈராயிரம் பயனாளிகளை
நாள் தோறும் தொடர்ந்து
உச்சரிக்க வைத்த பெயர்...
ராம்
ஆஅம்
இந்த பெயரை உச்சரிக்காத
உதடுகளே இல்லை..
இவன் மைக்ரோசாப்ட் ஈன்றுடுக்காத பிள்ளை
இவனின் திறமைக்கு
இவனே இணை...
நீ தொடும் போது
முட்களும் மலராகும்
அம்மலர்களே உனக்கு
மாலை ஆகும் ....
செல்லும் இடமும்
சிறப்பாய் அமைய
வாழ்த்தும் நண்பர்கள்