வசப்படும் வான்
எட்டிபிடிக்க
வேண்டாம் வானை
தொட்டுகொள்ளவே
வருமே அருகில்
கொட்டிகிடக்கும்
செல்வம் யாவும்
தொட்டு பார்க்கவே
வருமே அருகில்
சுற்றி இருக்கும்
கலைகள் யாவும்
கற்று கொள்ளவே
வருமே அணுகி
பேரும் புகழும்
ஒருங்கே பெற்று
வாழ வாழ்த்தும்
என்னை என்னும்போதெல்லாம்
மகிழ்வினில் ஆழ்த்தும் உன்னை
-------வேத ஹரி