ஆத்மதிருப்தி

எத்தனை திருவிழாக்கள்?
சிவனுக்கு
புத்தனுக்கு
யேசுவுக்கு
அல்லாவுக்கு
இத்தனைக்கும் எத்தனை கோடிகள்.
கோடிகள் வேண்டாம்
ரூபாய்களில்
ஒவ்வொருத்தனும் ஒரு திருவிழா
வளமற்ற மண்ணில் பிறந்தவனுக்கு
வளமற்ற உடம்பை பெற்றவனுக்கு
ஆகாயம் பார்த்து நடு தெருவில் நிற்பவனுக்கு
அகதி முகாமில் இருப்பவனுக்கு
நாதியற்ற அனாதைக்கு
செய்து பாருங்கள்
கடவுள்களுக்கு கூட ஆத்மதிருப்தி வரும் ………….

எழுதியவர் : எஸ்.வை.சசீ (11-Aug-12, 12:49 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 140

மேலே