சிறந்த கணவன்

சிறு வயதில் கை பிடித்து நடை பழக்கினர் அப்பா
இன்று நீ கை பிடித்துக் கொள்கிறாய்
உன்னுடன் நடக்கையில் ...
மீண்டும் குழந்தை ஆகிறேன் .
சிறு வயதில் மார்பில் சாய்த்து தூங்க வைத்தார் அப்பா
இன்று நீ உன் மார்பில் சாய்த்துக் கொள்கிறாய்
தூக்கத்திலும்..
துக்கத்திலும் ..
மீண்டும் பாதுகாப்பாக உணர்கிறேன் .
அனைத்திலும் பிரதிபலிக்கிறாய்
அப்பாவின் சாயலை...
உன்னை விட சிறந்த கணவன்
யாரும் இல்லை ..

எழுதியவர் : Nithra (13-Aug-12, 12:06 pm)
Tanglish : sirantha kanavan
பார்வை : 328

மேலே