பயணம் தொடர்கின்றது

என் பயணம்
தொடர்கிறது
மடியில் கனமில்லை
பையில் பணமில்லை
அனால் மனதில் தெளிவு
உள்ளத்தில் உறுதி
கருத்தில் ஆழம்
அதனால் என்பயணம் தொடர்கிறது
பாதைகள் சரியில்லை
ஆனாலும் பயணம்
தடைபடாது
வழியில் ஆயிரம் நண்பர்கள்
இளைப்பாற கிடைப்பார்கள்
பயணத்தில் வருவதில்லை
என் இலக்கு விடியல்
நிரந்தர விடியல்
அதைத்தேடி போகிறேன் என
அவர்களுக்கு தெரியும்
அதனால் பயணத்தில்
பங்கெடுக்க விருமபவில்லை
அனால் என் பயணம்
என் தேடல்
அவர்களுக்கு பயன்தரும்
அதானால் என் பயணம் தொடர்கிறது

எழுதியவர் : (14-Aug-12, 7:21 am)
சேர்த்தது : m arun
பார்வை : 125

மேலே