வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை !
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு விடுதலை !

பன்னாட்டு ராணுவத்தால் படை தொடுத்தவனோடு
பகை மறந்து வாழ்வது இனி சாத்தியமில்லை !

நாட்டு மக்களையே காட்டுமிராண்டித்தனமாக அழித்த
நயவஞ்சகனோடு இணக்கம் இனி சாத்தியமில்லை !

மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற கொடியவனை
மகாத்துமா இருந்தால் கூட மன்னிக்க மாட்டார் !

கொன்றது போக எஞ்சியோரை சிறைப்பிடித்து
முள்வேலியில் இட்டவனோடு வாழ்வது சாத்தியமில்லை !

ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடியது
சிங்களப்படை ஈழத்தில் நடத்திய படுகொலைகள் !

நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிந்தவனை
நாட்டின் அதிபராக மதிக்க மனம் வருமா ?

வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வஞ்சகமாகக் சுட்டவனை மன்னிக்க முடியுமா ?

மூப்பென்றும் பிஞ்சென்றும் பெண்னென்றும் பாராமல்
மூர்க்கமாக அழித்தவனை மதிக்க முடியுமா ?

தமிழ் இனத்தையே அழித்தது இலங்கைப் படை
தன் மக்களையே ஒழித்தது இலங்கை அரசுப்படை !

கொலை பாதகம் புரிந்த கொடியவர்களுடன்
கூடிவாழுங்கள் என்று போதிக்கும் மூடர்கள் !

இனவெறி பிடித்த சிங்களப்படை மிருகங்களோடு
இணைந்து வாழ்வது இனி இயலவே இயலாது !

இறையாண்மை என்ற பூச்சாண்டி காட்டி
இலங்கை இரண்டாகாது என்கின்றனர் !

அய் .நா. மன்றமே மவுனம் போதும் !
அநியாயம் புரிந்தவனுக்கு தண்டனை கொடு !

தெற்கு சூடான் உதயமானது தனி நாடாக !
தமிழ் ஈழமும் உதயமாகட்டும் தனி நாடாக !

ஈழக்கொடி பறக்க வேண்டும் அய் .நா. மன்றத்தில்
ஈழத்தூதுவர் அலுவலகம் திறக்க வேண்டும் இந்தியாவில் !

இலங்கையை உடன் இரண்டாக்கு ஈழத் தமிழர்களை ஒன்றாக்கு !
இனியும் சிங்களரோடு ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை !

சிங்களரும் தமிழரும் இனி இணைந்து வாழவே முடியாது !
சிந்தித்துப் பார்த்து பிரித்து வைப்பதே இருவருக்கும் நன்மை

ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லுவது வெட்டிப்பேச்சு
ஒருபோதும் இனி ஒத்துவராது உணருங்கள் !

ஈழத்தில் குடி புகுந்த சிங்களரை வெளியேற்றுங்கள்
ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களை குடி அமர்த்துங்கள் !

இரண்டுபட்ட இலங்கை என்று ஆக்குவதே
இரண்டு இனத்திற்கும் பாதுகாப்பு அறிந்திடுங்கள் !

ஈழம் ஈழத் தமிழருக்கு உடன் கிடைத்தாக வேண்டும்
ஈழத்தில் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் !

உலகத் தமிழர்களே உரக்கக் குரல் கொடுங்கள்
உதயமாகட்டும் ஈழத்தில் தமிழரின் தனி நாடு !

--

எழுதியவர் : இரா .இரவி (14-Aug-12, 6:19 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 201

மேலே