வருந்துகிறேன்
யானை வீட்டில் பூனை பூந்து
புது கதைய நீட்டையில,.....
ஏழை வெதச்ச வெள்ளாமைய
எருது வந்து மேஞ்சபோதும்,
கூனி குறுகி முதுகு கடுக்க
பொதி சொமக்குற கழுத போல,
மாறி மாறி மல்லுகட்டி
மறையாத வடுவ பெற்று,
இரவு பகல் கறந்தபால
வெள்ளைக்காரன் அருந்த விட்டோம்,.....!!
போதாதுன்னு பழைய கதைய கிளறி எடுத்து
சுதந்திரமுன்னு அலட்டிக்கிறோம்........