சொந்த காலில் நிற்க்க வேண்டும்

சுதந்திரக் காற்றைச் சுவாசித்த பின்பும்...
பெண்ணின் சுதந்திரம் கண்ணாடி பிம்மம்..

உரிமைக்காக நாம் போராடும் நேரம்
உடமைகள் அங்கு காணாமல் போகும்.

ஆணுக்கு பணியோ அடையாள சின்னம்
பெண்ணுக்கு பணியோ அகண்ட வானம்.....

பெண்ணுக்கு வேலை நிச்சயம் தேவை
அதை எடுத்துச் சொல்லும் இந்த ஒலை.

அடுத்தவரை நம்பி வாழ்ந்தது போதும்
இனி என்னை நம்பி சிலரும் வாழட்டும்..

தடைகள் தாண்ட தன்நம்பிக்கை வேண்டும்..
தன்மானம் காக்க சன்மான்ம் வேண்டும்..

திருமண பந்தத்தில் நான் தொலைந்து போகலாம்
திறமைகள் அங்கு புதைந்து போகலாம்..
திரண்டு எழ நல்ல திட்டம் வேண்டும்........

தமயனுக்கு தாய் பாரமாக மாறலாம் .
தன்னை காக்க அவள் முதியோர்இல்லம் நாடலாம்

அவளை காக்க அன்று ஓட வேண்டும்
அதற்க்கு இன்றே நல்ல வேலை வேண்டும்...

கட்டிய கணவன் கள்ளாய் மாறலாம்..
இல்லை
காதலுடன் அவன் கடவுளடி சேரலாம்...

கண்ணிரோடு என் பிள்ளைக் கனவும் களையும்..
கைகள் உயர்த்தி கட்டிடம் அமைத்தல் வேண்டும்..

சுமந்த பிள்ளைக்கு நான் சுமையாய் மாறலாம்
சுகங்கள் எல்லாம் சுருதியை இழக்கலாம்...

சோகம் தீர்க்க நான் விலக வேண்டும்..
எந்தன் சுமையை சுமக்க வேண்டும்.

உயிரும் என்னை அன்னைமடி சேர்க்கலாம்
உலகம் என்னை அனாதயாய் பார்க்கலாம்.

உடலை தூக்க அன்று உறவுகள் வேண்டும்…
அதற்க்கு இன்றே நான் சொந்த காலில்
நிற்க்க வேண்டும்..
வைஷ்ணவி

எழுதியவர் : vaishnavi (14-Aug-12, 11:06 pm)
சேர்த்தது : வைஷ்ணவி
பார்வை : 182

மேலே