கனவுகளோடு நான்......

பள்ளி படிப்பிற்கு கூட
இப்படி படிக்கவில்லை
இனி வரும் காலத்தில்
வயிறு நிறைவதற்கு
வேண்டிய தேர்வு
என
விடிய விடிய
கண்ணுறங்காமல் படித்து படித்து
கனவுகளோடு நான் எழுதிய
தேர்வு........
ஆனால் தேர்வு முடிவுகள்
வெளியாகாமல்
மீண்டும் தேர்வு எழுத வைத்த
தமிழ் நாடு அரசு தேர்வாணயத்திற்கு
வேறென்ன நான் சொல்ல?
வேதனையோடு நன்றியே
சொல்கிறேன்,
ஒரு வேளை..........
இந்த தேர்வை விட
அதிக மதிப்பெண் கிடைக்குமோ?
மீண்டும் எழுதும் போது?

எழுதியவர் : சாந்தி (14-Aug-12, 10:59 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 156

மேலே