மூட நம்பிக்கை

ஒருவன் ஐந்து விரல்களை அவனது மூலதனமாக
பயன்படுத்தினால் பகுத்தறிவு.
ஐந்து விரல்களிலும் ஐந்து கல் மோதிரம்
சோசியர் சொன்னார் என்று
போட்டால் மூடத்தனம்.
தனக்கு உரிய காலத்தில் உதவிய
மனிதரை கடவுளாக நினைத்தால் அவன் மனிதன்.
கடவுள் என்ற பெயரால் நிறைய வழிகளில்
பணத்தை அறியாமையால் இழந்தால் முட்டாள்.
சோசியர் சொன்னால் படிப்பை நிறுத்துகிறார்கள்.
பரிட்சையில் தவறான
வழிகளை பின்பற்றுகிறார்கள்
பரிட்சையில் பட்டை அடித்து கொள்கிறார்கள்.
பின்பு கோவிலுக்கு சென்று
மன்னிப்பு கேட்கிறார்கள்.
சுதந்திரம் அடைந்து
65 வருடங்கள் ஆகிவிட்டதாம்.
ஆனால் மூட நம்பிக்கை?
மக்களின் அறியாமை, சிலருக்கு வயிறு
நிறைய வழி.
அவர்களுக்கு பிழைக்க வேறு வழியே இல்லை.
தவறு மீண்டும் மீண்டும் செய்து பின்பு
கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்பதைவிட
கோவிலுக்குச் செல்லாமலே மனசாட்சி படி
செயல்படுபவன் பகுத்தறிவாதி
மனிதன் கோவிலிருக்கும் தைரியத்தால்
மனசாட்சி இருப்பதை மறந்துவிட்டான்.
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
உங்கள் வயிறு நிறைய நீங்கள்தான்
சாப்பிட வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் முன்னேற நீங்கள்தான்
முடிவெடுக்க வேண்டும்.