ஏன் இந்த மௌனம் ?

தேவி!
......
தீக்குள் வைத்த விரலாய்
என் இதயம்
.............!

ஆலையில் அகப்பட்ட
கரும்பாய்
என் நெஞ்சம்
............!

'ஷெல்' பட்டு
சிதறிய தேகமாய்
என் உள்ளம்
.......!

அடைக்கலம் கிடைக்காத
அகதியாய்
நான்
........!

கற்பனைக் கலைந்த
கவிஞனின் நிலையாய்
என் எண்ணம்
.............!

சுட்டு வீழ்த்தப்பட்ட
யுத்த விமானமாய்
என் காதல்
............!

பிரஜா உரிமை கோரிக்கை
நிராகரிக்கப்பட்ட
புலம்பெயர்ந்தவனாய் நான்
..............!

வாசிக்கப்படாமல்
கிழித்தெறியப்பட்ட புத்தகமாய்
என் இருப்பு
...............!

முகவரி தவறாய்
திரும்பி வந்த
மடலாய்
என் மனசு
.............!

தினம் தினம்
ஏறுகின்ற விலைவாசியாய்
என் ஏக்கம்
.............!

நடுக்கடலில்
கைது செய்யப்பட்ட
அகதிகள் படகில் நான்
............!

காணாமல் போன
இரவுகளில்
என் கனவுகள்
..............!

கற்றுக்கொள்ளாத ....
கற்றுக்கொடுக்காத பாடமாய்
என் அன்பு
...........!

தேவி!
இந்த தேச மக்களின்
அவலக் குரல் போல்....
இந்த பாவி மனம்
அழுகிறது!

அது உனக்குக் கேட்கிறதா?
சொல்!
இல்லை .....
கேட்டும் கேட்காத மாதிரி...
புரிந்தும் புரியாத மாதிரி...!

தேவி!
ஏன் இந்த மௌனம்?
பேசு!

நாம் பேசித் தீர்வு காண்போம்.
எங்களுக்குள்
தினம் தினம் சாகாமல்!

- கலாநெஞ்சன் ஷாஜஹான்

எழுதியவர் : - கலாநெஞ்சன் ஷாஜஹான் (16-Aug-12, 9:18 pm)
பார்வை : 553

மேலே